ADDED : அக் 07, 2016 10:15 AM

அ நிறம் | அளவு
சுராசுர சேவித பாத பங்கஜா
கரே விராஜித் கமனீய புஸ்தகா
விரிஞ்சி பத்னீ கமலாசனஸ் திதா
சரஸ்வதீ ந்ருத்யது வாசி மேசதா
பொருள்:
தாமரையில் வீற்றிருப்பவளே! தேவர்களாலும், அசுரர்களாலும் போற்றப்படுபவளே! அழகிய சுவடியைக் கையில் ஏந்தியிருப்பவளே! பிரம்மாவின் துணைவியே! சரஸ்வதியே! என் நாவில் குடியிருக்க வேண்டும்.
குறிப்பு:
பிரபஞ்ச சார சங்கிரக சரஸ்வதி தியான ஸ்லோகம்.
