
* நவக்கிரகங்களுக்கு மனைவி இருப்பதாக சொல்கிறார்களே.. உண்மையா?
சேரலாதன், செல்லம்பட்டி
உண்மை தான். எல்லா கிரகங்களுக்கும் மனைவி உண்டு.
* கோயிலில் ஏற்றுவது போல வீட்டிலும் நெய் தீபம் ஏற்றலாமா?
டி.சந்தியா, கவுண்டம்பாளையம்
கோயில், வீடு எதுவாக இருந்தாலும் சுத்தமான நெய்யில் தீபம் ஏற்றுவது நல்லது.
முகூர்த்த நேரம் ஒன்றரை மணி நேரமாக கணக்கிடப்படுவது ஏன்?
பி.ஸ்ரீபாதராஜன், சென்னை
அந்த காலத்தில் நாழிகை கணக்கு வழக்கில் இருந்தது. ஒரு நாழிகை 24 நிமிடம். இரண்டரை நாழிகை என்பது 60 நிமிடம் (ஒரு மணிநேரம்). சுபநிகழ்ச்சிக்கான கால அளவு மூன்றே முக்கால் நாழிகை (அதாவது ஒன்றரை மணி நேரம்). இதை 'முகூர்த்த நேரம்' என்பர்.
கோயில்களில் பெரியவர்களை கண்டால் கைகூப்பி வணங்கலாமா?
அ.கிருஷ்ணசாமி, திருப்பூர்
நிச்சயம் கை கூப்பி வணங்கலாம்.
திருஷ்டி பூசணியை எத்தனை நாளில் உடைக்கலாம்?
எம்.கிருபானந்தன், புதுச்சேரி
இது மனம் சார்ந்த விஷயம். விளைந்த காயாக இருந்தால் நீண்டநாள் கட்டியிருக்கலாம். இல்லாவிட்டால், அழுகும் முன் உடைத்து விட்டு வேறு காயை கட்டலாம்.
மகாலட்சுமி கடாட்சம் பெற என்ன விரதம் மேற்கொள்ளலாம்?
ஏ.மகாலட்சுமி, கோவை
பவுர்ணமி, வெள்ளிக்கிழமையில் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
தோஷம் நீங்க பரிகாரமாக கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிடலாமா?
அண்ணா அன்பழகன், சென்னை.
தோஷம், பரிகாரம் என்ற எண்ணங்களை விட்டு, சுவாமி பிரசாதம் என்ற நம்பிக்கையுடன் சாப்பிட்டால் நன்மையே உண்டாகும்.
சனிக்கிழமை வீட்டிலேயே எள் தீபம் ஏற்றலாமா?
அ.சசிதரன், சிவகங்கை
கூடாது. கோயிலில் நவக்கிரகம் அல்லது சனி சன்னதியில் மட்டுமே எள்தீபம் ஏற்ற வேண்டும்.

