தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜூன் 08, 2018 03:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2018 03:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* காலசர்ப்ப தோஷம் நீங்க பரிகாரம் சொல்லுங்கள்.

என்.அமிர்தவல்லி, திருப்பூர்

செவ்வாயன்று ராகு காலத்தில் (மதியம் 3:00 - 4.30 மணி) வீட்டில் ஒரு பாத்திரத்தில் அரைக்கிலோ கருப்பு உளுந்து, நடுவில் நல்லெண்ணெய் தீபம் வைத்து துர்க்கை ஸ்தோத்திரம், கவசம், ஸ்லோகம் சொல்லுங்கள். ராகுகாலம் முடிந்த பின் உளுந்தை தானம் கொடுங்கள். தொடர்ந்து ஏழு வாரம் செய்ய தோஷம் நீங்கும்.

கோயில் அருகில் மரணம் நேர்ந்தால் நடை சாத்துவது ஏன்?

எஸ்.விசாலராணி, சிவகங்கை

பிரேதம் எடுக்கும் வரை சவத்தீட்டு உண்டாகும் என்பதால் நடை சாத்தப்படுகிறது. துக்கம் நிகழும் போது, சுவாமியும் பூஜை ஏற்காமல் இருப்பதாகச் சொல்வர். அந்தந்த கோயில், ஊரைப் பொறுத்து நடை சாத்துவது மாறுபடலாம்.



* வீட்டில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது எப்படி?

எஸ்.சித்ரா, வில்லியனுார், புதுச்சேரி

தண்ணீர் அடுத்து பால், வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். நிறைவாக தண்ணீர் விட்டு சுத்தம் செய்து வஸ்திரம் அணிவிக்க வேண்டும். சந்தனம், குங்குமம் சாத்தி மலர் அலங்காரம் செய்து நைவேத்யம், தீபாராதனை என்ற வரிசையில் வழிபாட்டை நடத்த வேண்டும்.

நவக்கிரக படங்களை வீட்டில் வழிபடலாமா?

என்.சுசீலா, சென்னை

விலைக்கு வாங்காமல், மற்றவர் மூலம் கிடைத்தால் வீட்டில் வழிபடுவதில் தவறில்லை. எள்தீபம் போன்ற கிரகதோஷ பரிகாரங்களை கோயிலில் செய்ய வேண்டும்.

கார்த்திகையில் மாலையிலும், மார்கழியில் காலையிலும் வாசலில் விளக்கேற்றுவது ஏன்?

டி.பத்மா, கோவை

விளக்கு வழிபாடு இந்துக்களின் மரபு. ஞானசம்பந்தரின் தேவாரத்தில் 'கார்த்திகை விளக்கீடு' பற்றிய குறிப்பு உள்ளது. புனிதமான கார்த்திகை தீபத்தை தரிசித்தால் பூச்சி, புழு கூட நற்கதி அடையும். உலக நன்மைக்காக கார்த்திகை மாதம் மாலையில் தீபம் ஏற்றுகிறோம். தேவர்களுக்கு விடியல் நேரம் மார்கழி என்பதால், அந்த மாதத்தில் அதிகாலையில் விளக்கேற்றி வழிபடுகிறோம்.

மவுன விரதத்திற்கும், ஆன்மிகத்திற்கும் என்ன தொடர்பு ?

கே.ராஜேஷ், புத்துார்,

விரதம் என்பதன் பொருள் 'கடினம்'. மவுனவிரதம் என்பது கடினமான பயிற்சியே. 'நான் கடவுளுக்காக விரதம் இருக்கிறேன்' என கடவுளை சிந்திப்பதே இதன் நோக்கம். ஆன்மிகப் பாதையில் ஒரு மனிதனை உயர்த்தும் சக்தி மவுன விரதத்திற்கு உண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us