தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஏப் 29, 2022 08:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2022 08:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.நளினி, விழுப்புரம்.

*சுகப்பிரசவம் நடக்க என்ன வேண்டுதல் செய்யலாம்?

திருச்சி மலைக் கோட்டையில் உள்ள தாயுமான சுவாமிக்கு வாழைப்பழத்தார் செலுத்துவதாக நேர்ந்து கொள்ளுங்கள். சுகப்பிரசவம் நடக்கும்.

மலர் ராஜி, புதுச்சேரி.

*இறந்தவரின் ஆன்மா அவரது வீட்டில் ஒரு ஆண்டு தங்கியிருக்குமாமே...

இல்லை. இறப்பு வீட்டில் 'சபிண்டீ கரணம்' என்னும் காரியம் செய்தவுடன் இறந்தவரின் ஆன்மா பித்ருலோகம் சென்று விடும். மந்திரங்கள் ஓதி முறைப்படி கர்ம காரியங்களைச் செய்தால் இறந்தவரின் ஆசி குடும்பத்தினரை பாதுகாக்கும்.

நா.குழந்தைவேலு, மதுரை.

*என் பெற்றோர் அடிக்கடி ஜாதகம் பார்க்கிறார்களே...

தேவையில்லை. அடிக்கடி ஜாதகம் பார்த்துக் கொண்டு இருந்தால் எதிர்காலம் என்னாவது? அவசியம் இருந்தால் மட்டும் ஜோதிடரை ஆலோசிக்கலாம். உழைப்பால் உயர வழி பாருங்கள்.



பி.அகிலா, திருத்தணி.

*மற்றவர்களின் ஆடையை உடுத்துவது தவறா?

ஒருவரின் ஆடையை, அவரிடம் கேட்டு உடுத்துவது தவறல்ல. கேட்காமல் உடுத்தினால் வறுமை உண்டாகும்.

கே.பிரசன்னா, கன்னியாகுமரி.

*சுவாமி சிலைகளை திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்யலாமா?

கூடாது. கருவறையில் தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும். நாமக்கல் ஆஞ்சநேயர், திருச்சி வெக்காளியம்மன் கோயில்களில் தல வரலாற்றின் அடிப்படையில் திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர்.



என்.எம்.சுப்பிரமணி, சென்னை.

*நீண்ட துாரப் பயணம் தடைபடாமல் இருக்க பரிகாரம் சொல்லுங்கள்.

விநாயகருக்கு தேங்காய் உடைத்தால் பயணம் தடைபடாது.

எம்.சிந்துஜா, பெங்களூரு.

*குழந்தைகளுக்கு கடவுளின் பெயர் வைப்பது நல்லதா?

நல்லது தான். குழந்தைகளுக்கு கடவுள் பெயர் வைத்தால் புண்ணியம் கிடைக்கும்.

ரா.சின்னச்சாமி, தேனி.

*தோஷங்களில் மோசமானது எது?

நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு கடுமையான தோஷம் ஏற்படும்.

எஸ்.குமார், கோவை.

*தன்வந்திரி பகவான் கையில் அட்டைப்பூச்சி இருப்பது ஏன்?

ஆயுர்வேத மருத்துவத்தில் அறுவை சிகிச்சைக்கு அந்தக் காலத்தில் அட்டைப்பூச்சியை பயன்படுத்தி வந்தனர். அதனடிப்படையில் மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் கையில் அட்டைப்பூச்சி உள்ளது.



ஆர்.எஸ்.சரவணன், துாத்துக்குடி.

*பூஜையறையில் நாகர்சிலை இருக்கலாமா?

ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தால் மட்டும் நாகர்சிலை வழிபாடு வீட்டில் செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us