ADDED : ஏப் 29, 2022 08:42 AM

* கடவுள் வழிபாடு, பூஜை முதலிய செயல்களை கிழக்கு (அ) வடக்கு நோக்கிச் செய்ய வேண்டும்.
* வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணருக்கு அவல், பொரி, பாயசம் வைத்து வழிபட்டால் இழந்த பொருட்களை பெறலாம்.
* வீட்டைக் காப்பது நிலைப்படி. அதனால்தான் அதை கடவுளாக கருதி மஞ்சள், குங்குமம் இட்டு வழிபடுகிறோம்.
* திட்டமிடாமல் வாழ்ந்தால் பின்னாளில் கஷ்டப்படுவீர்கள்.
* பெரியோரை வணங்குவோருக்கு ஆயுள், அழகு, இன்பம், வலிமை ஆகியவை கூடும்.
* தந்தையின் நட்சத்திரத்தில் மகனும், தாயின் நட்சத்திரத்தில் மகளும் பிறக்க கூடாது.
* உங்கள் வீட்டில் இருக்கும் பெண் கர்ப்பமாக இருக்கும்காலத்தில் கிரகதோஷ பரிகாரம் எதுவும் செய்ய வேண்டாம்.
* தனக்கு கல்வியை கற்றுக் கொடுத்த குருவின் மகளைத் திருமணம் செய்யக்கூடாது.
* ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசையோ, இரண்டு பவுர்ணமியோ வந்தால் அது 'மலமாதம்' எனப்படும். இந்த மாதத்தில் சுபநிகழ்ச்சி வைக்கக்கூடாது.
* கஜானாவில் மல்லிகைப்பூ வைத்தால் மிகவும் நல்லது.
* பழமையான கோயில்களுக்கு மகான்கள் வந்து சென்றிருப்பதால், நாம் அங்கு செல்வதால் வாழ்வு சிறக்கும்.
