
அ.ரம்யா, ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி.
*குழந்தை பாக்கியம் பெற என்ன செய்யலாம்?
ஞானசம்பந்தரின் 'கண்காட்டு நுதலானும்' பதிகத்தை தினமும் பாடுங்கள். மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கோயிலிலுள்ள தீர்த்தங்களில் நீராடுங்கள்.
எம்.காயத்ரி, கல்யாண்புரி, டில்லி.
*சிவபூஜையில் கரடி என்பது ஏன்
நல்லவர்கள் உள்ள இடத்திற்கு தீயவர் ஒருவர் வந்தால் பிரச்னை உருவாகும். இதையே இப்பழமொழி குறிப்பிடுகிறது.
கே.ராஜேந்திரன், ராமநாதபுரம்.
*மணமாகி மூன்று மாதமாகியும் தாலி பிரித்து கட்டவில்லை. மனைவி கர்ப்பமாக இருந்தால் எப்போது நடத்தலாம்?
தாலி பெருக்குதல் எனப்படும் இந்த சுபநிகழ்ச்சியை ஆறாவது மாதத்திலும் நடத்தலாம்.
ஆ.முத்துராஜா, வடுகபட்டி, தேனி.
*வலிய வரும் பிரச்னைகளை எதிர்கொள்வது எப்படி?
துணிவுடன் பிரச்னைகளை எதிர்கொள்ளுங்கள். தர்மம் இருக்குமிடத்தில் கடவுளின் அருள் இருக்கும்.
த.நேரு, வெண்கரும்பூர், கடலுார்.
*வாழ்வு சிறக்க என்ன செய்யலாம்?
குளத்தின் நீர்மட்டத்திற்கு ஏற்ப தாமரை மலர் உயர்வது போல எண்ணம், சொல், செயலுக்கு ஏற்ப வாழ்வு சிறக்கும்.
த.பாலசுப்பிரமணியன், கணபதி, கோயம்புத்துார்.
*காப்புக் கயிறு எத்தனை நாள் கையில் இருக்க வேண்டும்?
திருமணம், திருவிழா, நோன்பு உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்காக கட்டுகிறீர்களோ அது முடியும் வரை இருக்க வேண்டும்.
எல்.ஸ்ரீராம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி.
*வேப்ப மரத்தின் மகிமையைச் சொல்லுங்கள்.
நல்ல சக்திகளை அதிகரிக்கச் செய்யும் இதன் விதை, இலை, காய், பழம், வேர் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.
கே.எல்.கந்தரூபி, திருவேற்காடு, திருவள்ளூர்.
*கொன்றால் பாவம் தின்றால் போச்சு சரிதானா...
அசைவம் உண்பதை நியாயப்படுத்தாதீர்கள். உயிர்க்கொலை, மாமிசம் உண்பது கூடாது என்கிறது திருக்குறள்.
ப.தங்கவேலு, மறைமலைநகர், செங்கல்பட்டு.
*அகால மரணம் ஏன் ஏற்படுகிறது? இதன் முடிவுதான் என்ன?
இது அவரவர் கர்மவினையால் ஏற்படுகிறது. அந்த ஆன்மாவின் வினைக்கேற்ப பிறவி ஏற்படுவதோடு கடவுள் அருளால் சாந்தியும் கிடைக்கும்.
பி.வனிதா, பெங்களூரு.
*இறந்தவரின் படத்திற்கு தினமும் தீபம் காட்டலாமா?
பழம், பால் நைவேத்யம் செய்து தீபம் காட்டலாம்.

