sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : பிப் 25, 2014 04:51 PM

Google News

ADDED : பிப் 25, 2014 04:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

** பிரம்ம முகூர்த்த வேளையின் சிறப்பினைப் பற்றிக் கூறுங்கள்.

சி. சாந்தி, கூத்தப்பாக்கம்

விடியற்காலம் 4.30 முதல் 6.00 மணி வரையுள்ள நேரம் பிரம்ம முகூர்த்தம். இரவு என்பது மனிதன் உட்பட எல்லா ஜீவராசிகளும் உறங்கும் நேரம். அப்போது உலக இயக்கமே தளர்ந்து விடும். விடியற்காலையில் குயில், சேவல் போன்ற பறவைகள் கூவுகின்றன. உலக இயக்கம் சுறுசுறுப்பு அடைகிறது. ஒவ்வொருநாளும் சிருஷ்டியாகும் விடியற்காலைப் பொழுதை, சிருஷ்டி கடவுளான, பிரம்மாவின் பெயரால் பிரம்ம முகூர்த்தம் என்று அவர் பெயரில் சாத்திரங்கள் கூறுகின்றன. இந்த நேரத்தில் குளித்து விட்டு வழிபாடு செய்தால், நாள் முழுதும் வெற்றியே. தொடக்கம் நன்றாக இருந்தால், முடிவும் நன்றாகத் தானே இருக்கும்.

* ஏழேழு பிறவிக்கும் நமக்கு மனிதப்பிறவியே தொடருமா?

பி. விஸ்வநாதன், மஞ்சூர்

அவ்வளவு தான்! எதற்கும் அஞ்சாத, எதைப் பற்றியும் கவலைப்படாதவர்களுக்கு இன்னும் அல்லவா துணிச்சல் வந்து விடும். இந்த பிறவியில் செய்யும் பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் அடுத்த பிறவி அமைகிறது. பாவம் மிகுதியானால், மனிதப் பிறவியை விட கீழான மிருகப்பிறவி கிடைக்கும். புண்ணியம் அதிகமானால், நம்மை விட உயர்ந்த மகான், தேவர்களாக நல்ல பிறவி கிடைக்கும்.

* பிரயாணத்தில் இருக்கும்போது, அமாவாசை தர்ப்பணம் செய்வது எப்படி?

ஏ.ராமன், சென்னை

கூடுமானவரை தர்ப்பண நாளில், பிரயாணத்தை அமைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வெளியூர் கிளம்பும் முன்பே, வீட்டில் தர்ப்பணம் முடித்து, சாப்பிட்டு விட்டு புறப்படலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், நீண்ட தூர பயணத்தின் நடுவில் அமாவாசை வந்து விட்டால், ரயில் பயணமாக இருந்தால் அதிலேயே குளித்து விட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். விமானப்

பயணமாக இருந்தால், ஏதாவது ஒரு இடத்தில் நின்று மாறும் இடத்தில் குளித்து தர்ப்பணம் முடிக்கலாம். கையில் சிறிது எள்ளும் தண்ணீரும் இருந்தால் போதும். இது போன்ற சமயத்தில், வீட்டில் தயார் செய்த சப்பாத்தி சாப்பிடலாம் எனவும், அதற்கு பழையது தோஷம் இல்லை எனவும் காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார்.

மணப்பந்தலில் கட்டிய வாழை மரத்தின் பூ, காய்களை சமையலுக்குப் பயன்படுத்தலாமா?

எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை

முகூர்த்தப் பந்தலில் மங்களச் சின்னங்களாகத் தான் வாழை மரம் கட்டப்படுகிறது. இவற்றின் பூ, கா#களைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

விளக்கில் எண்ணெய் இருக்கும் வரை தானாகவே எரிந்து குளிரட்டும் என்று விட்டுவிடுவது சரிதானா?

எஸ்.பி. இந்திராணி, திருப்பூர்

எண்ணெய் இல்லாமல் திரி கருகி விளக்கு அணையக் கூடாது. அதற்கு முன்பாகவே மலரினால் அமர்த்தி விட வேண்டும்.






      Dinamalar
      Follow us