sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : மே 06, 2014 04:07 PM

Google News

ADDED : மே 06, 2014 04:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

** வாஸ்து என்றால் என்ன?

என். அனந்தலட்சுமி, சென்னை

வாஸ்து என்றால் 'வசிக்கும் இடம்'. தமிழில் 'மனையடி' என்று குறிப்பிடுவர். நாம் வசிக்கும் இடத்தை இத்தனை அடி நீளம், அகலத்தில் அமைத்துக் கொள்ளும் அளவைக் கூறுவதே மனையடி சாஸ்திரம் அல்லது வாஸ்து சாஸ்திரம். ஒரு அரக்கன் தன் பசியைப் போக்கிக் கொள்ள இந்த உலகையே விழுங்க முற்பட்டான் என்றும், அவனுக்கு வீரபத்திரர் ஒரு பூசணிக்காயை கொடுத்தருளி பசியைப் போக்கினார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. பசி நீங்கிய அந்த அரக்கன் பூமி முழுவதும் பரந்து விரிந்து படுத்து உறங்குவதால், அவனது உடலே நாம் வசிக்கும் பூமியாகி விட்டது. எனவே, அவன் வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுகிறான். மனை முகூர்த்தம் செய்யும் போது, வாஸ்து புருஷனுக்கு பூசணிக்காய் பலியிடுவார்கள். மனைக்கான வரைபடம் தயாரிக்கும்போது, மனையடி சாஸ்திரப்படி தயார் செய்கிறார்கள்.

* யாராவது தும்மினால் அதை அபசகுனம் என்கிறார்களே! ஏன்?

ஆர்.பிரேமா, சிதம்பரம்

சில விஷயங்களை இப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது சுபவிஷயம் குறித்து பேசத் தொடங்கும் போதும், எழுதத் தொடங்கும் போதும், செய்ய ஆரம்பிக்கும் போதும் தும்மினால் அபசகுனம் என்று எடுத்துக் கொண்டு சிறிது நேரம் தாமதம் செய்து விட்டு மீண்டும் தொடங்கலாம். தும்மல் என்பது இயற்கையாக வருவது. அதை தடுக்கவும் முடியாது, தடுக்கவும் கூடாது. எனவே, தும்மல் வந்து விட்டதே! ஏதாவது நடந்து விடுமோ' என்று பயப்படாமல் இருந்தாலே போதும். அபசகுனம் சுபசகுனமாக மாறி விடும்.

ராகு கால துர்க்கை வழிபாடு பற்றிச் சொல்லுங்கள்.

பா. கார்த்திகேயன், உளுந்தூர்ப்பேட்டை

நவக்கிரகங்களில் ராகு, கேது ஆகிய கிரகங்களுக்கு தனி கிழமைகள் கிடையாது. எனவே, தினமும் ஒன்றரை மணி நேரம் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டு ராகுகாலம், எமகண்டம் எனப்படுகிறது. கேதுவுக்குரிய நேரம் எமகண்டம். இரு கிரகங்களுமே அரக்க சுபாவம் கொண்டவர்கள் என்பதால், இந்த இரு காலங்களும் நல்லவை கிடையாது. ராகுவுக்கு அதிதேவதை துர்க்கை என்பதால், ராகுதோஷம் உள்ளவர்கள் துர்க்கையை ராகுவேளையில் வழிபடுவது வழக்கில் உள்ளது.

* எதிரி பயம் தீர எந்த வழிபாட்டை மேற்கொள்வது அவசியம்?

ஜெ. மகேஸ்வரி, மதுரை

சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்களை வழிபட்டால் எதிரிபயம் நீங்கும். நாம் பயப்படும் படியான எதிரிகளை ஏற்படுத்திக் கொள்ளாமல், எல்லோரிடமும் அன்பு காட்டிப் பழகி வந்தால், எப்போதுமே பயப்படத் தேவை இல்லை.






      Dinamalar
      Follow us