sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : அக் 06, 2014 02:52 PM

Google News

ADDED : அக் 06, 2014 02:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

** தெய்வத்தை நேரில் காணும் பாக்கியம் இந்தக் காலத்தில் கிடைக்காதா?

டி.சித்ரா, காரமடை

இது கலியுகம். இதன் இலக்கணம்.. எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் தவறு செய்வார்கள். நல்லவர்களை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள். பாவத்தின் தன்மை அதிகரித்திருக்கும். உலகில் தெய்வத்தை நேரடியாக காண முடியாது. உண்மையான பக்தியும், தர்மமும், ஒழுக்கமும் கடைபிடிப்பவர் வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் தனது சக்தியை தெய்வம் வெளிப்படுத்தி உறுதுணையாக இருந்து வரும். தீயவர்களுக்கும் தன் சக்தியை உணர்த்தினாலும் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாமல் பாவத்தில் ஈடுபடுகிறார்கள். தெய்வத்தைக் காணும் பாக்கியம் என்பது கலியுகத்தில் குறைவே. ஆனால், மனதளவில் தெய்வீகத் தன்மையை உணர முடியும்.

மரண பயம் நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்?

சு.லக்குமண சுவாமி, மதுரை

திங்கட்கிழமையன்று சிவபெருமானை வழிபட வேண்டும். வில்வ மாலை சாத்தி ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து நமஸ்காரம் செய்தால் மரணபயம் அடியோடு நீங்கி விடும்.

* திருமணச் சடங்குகளில் பெற்றோருக்கு மணமக்கள் பூஜை செய்வது ஏன்?

கண்ணப்பன், காஞ்சிபுரம்

பிரம்மச்சாரி என்ற நிலையில் இருந்து கிரகஸ்தன் என்ற நிலைக்கு உயர்த்துகின்ற திருமணம், ஒருவருக்கு கிடைக்கும் மறுபிறவியாகும். நம்மைப் பெற்றெடுத்து, ஒழுக்கமுடன் வளர்த்து ஆளாக்கிய பெற்றோரே, நமக்கு கண் கண்ட தெய்வம். குடும்ப வாழ்வில் ஈடுபடுவதற்கு முன் அந்த தெய்வங்களை வழிபட்டு அவர்களின் ஆசியைப் பெற வேண்டும். பிறகே மணமகளுக்கு மாங்கல்யம் சூட்டும் மங்களத்தைச் செய்ய வேண்டும்.

* பணம் இல்லாததால் நேரில் சென்று பல கோயில்களைத் தரிசிக்க முடியவில்லை. மனதிற்குள் அந்தந்த தலத்திலுள்ள இறைவனை வழிபட்டால் பலன் கிடைக்குமா?

ப.பாலகிருஷ்ணன், திட்டக்குடி

பக்தியோடு எந்தக் கோயிலுள்ள இறைவனை வழிபட்டாலும் அதற்கு முதலிடம் கொடுத்து அருள்புரிவார். சென்னை திருநின்றவூரில் அற்புத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஒரு அரசன் சிவபெருமானுக்கு கருங்கல்லில் கோயில் கட்டிக் கொண்டிருந்தான். திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த பூசலாருக்கு தானும் அதே போல கோயில் கட்ட ஆர்வம் எழுந்தது. ஆனால், கையில் பணம் கிடையாது. பத்மாசனத்தில் அமர்ந்து மனதிற்குள் கோயில் கட்டினார். ஒவ்வொரு நாளும் திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தார். அரசர் வைத்த நாளும், அடியவர் வைத்த நாளும் ஒரே நாளாக அமைந்தது. அந்நாளுக்கு முதல் நாள் இரவு கனவில் தோன்றிய சிவன், 'நாளை நீ குறித்த நேரத்தில் பூசலார் என்னும் பக்தரும் கும்பாபிஷேகம் நடத்த உள்ளார். நான் அங்கு சென்று வர தாமதமாகும்' என்றார். அரசனும் அவரைத் தேடிக் கண்டு பூசலாரை வணங்கியதாக பெரியபுராணம் கூறுகிறது. இதிலிருந்து மன வழிபாட்டின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

பொட்டு வைப்பது போல மோதிர விரலில் விபூதி எடுத்துப் பூசுவது சரிதானா?

கே. வேலுச்சாமி, தாராபுரம்

பொட்டு மாதிரியே வைத்துக் கொள்ளாமல், நன்றாகப் பூசிக் கொண்டால் சரி தான்.






      Dinamalar
      Follow us