sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்!

/

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : அக் 08, 2014 04:14 PM

Google News

ADDED : அக் 08, 2014 04:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் போது ஒருவர் செய்யும் தீய செயலும் கடவுள் செயலாகி விடுமே. விளக்கம் தேவை.

எஸ்.கோவிந்தராஜன், மதுரை

எத்தனையோ பிறவிகள் எடுக்கிறோம். இதற்கு முன்பான பிறவிகளில் எவ்வளவோ நல்லதும், தீயதும் செய்திருப்போம். அதன் பலனாகவே இன்பதுன்பம் கலந்த வாழ்வை அனுபவிக்கிறோம். அதுபோல, நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் வாழ்வதும் இப்படித் தான். கடுமையான பாவம் செய்து தண்டனை அனுபவிக்க வேண்டியவர்களையும் இறைவன் கருணையால் ஆட்கொள்கிறார். அதாவது ஒருவர் தவறு செய்தால் தண்டனையை அனுபவித்தபின் பிறகு துன்பம் நீங்கி விடும். நல்லவர்கள் கஷ்டப்படுவதும் கூட இந்த அடிப்படையில் தான். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று புறநானூற்றுச் செய்யுள் குறிப்பிடுவதைக் காணலாம். சூரபத்மனைப் பிறக்கச் செய்ததும், அவன் மூலம் தேவர்கள் துன்பப்பட்டதும் இறைவன் செயல். சூரபத்மனையே மயில் வாகனமாக ஏற்றுக் கொண்டதும் இறைவன் செயல் தான்.

* கர்ப்பிணிக்கு அணிவிக்கும் வளையலால் குழந்தைக்கு உண்டாகும் நன்மை என்ன?

எஸ்.கிருத்திகா, சென்னை

வளையல் காப்புக்கு 'கங்கண தாரணம்' என்று பெயர். கருச்சிதைவு ஏற்படாமல் குழந்தையைப் பாதுகாக்க இதைச் செய்ய வேண்டும்.

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று சித்தர்கள் பாடுகிறார்களே. சிலை வழிபாட்டை ஏன் சித்தர்கள் மறுக்கிறார்கள்?

பிரபு. கருணாகரன், பொள்ளாச்சி

'மனமது செம்மையால் மந்திரம் ஜபிக்க வேண்டாம்' என்பதற்குச் சொன்ன பதிலே இதற்கும் பொருந்தும். எனினும் சற்று விரிவாக்கச் சிந்திப்போம். நாதன் நமக்குள் இருப்பதை உணர்ந்து வாழ்பவர்களுக்கு சிலை வழிபாடு தேவையில்லை என்பது சித்தரின் கருத்து. இறைவன் நம்முள் உயிரில் கலந்து நிற்கிறான் என்பது முதுகலைப்படிப்பு போன்றது. சிலை வழிபாடு என்பது அரிச்சுவடி போன்றது. முதுகலைப்பட்டம் பெற்றவர்களுக்கு அரிச்சுவடி படிக்கத் தேவையில்லை. ஆனால், அரிச்சுவடி இல்லாமல் யாரும் படிக்க முடியாது. 'நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்' என்று சொன்னார் திருமூலர். ஒட்டு மொத்த சித்தர்களும் சிலை வழிபாட்டை மறுக்கிறார்கள் என்று கருதுவது தவறு. திருமூலரும் ஒரு சித்தர் தான். அவரே சிவலிங்கத் திருமேனி முதலாகிய பல வடிவங்களைக் குறிப்பிடும் வழிபடும் முறைகளையும் விளக்கியுள்ளனர்.

** கோலத்தின் நடுவே மஞ்சள், குங்குமம் வைப்பது சரி தானா?

எஸ். மகாலட்சுமி, புதுச்சேரி

தவறு. கோலத்தை அரிசிமாவினால் மட்டுமே இட வேண்டும். இதன் மூலம் எறும்பு போன்ற உயிர்களுக்கு உணவளிக்கிறோம். கால்மிதி படும் இடத்தில் வழிபாட்டுக்குரிய பொருட்களான மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வைப்பது கூடாது.

கோயில் பிரசாதமாக கொடுத்த எலுமிச்சம்பழத்தை என்ன செய்ய வேண்டும்?

பி. கிருஷ்ண ராஜூ, அன்னூர்

மற்றைய நைவேத்ய பிரசாதங்களைச் சாப்பிடுவது போல் இதையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us