ADDED : அக் 08, 2014 04:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. குயில்பத்து இடம் பெற்றுள்ள திருமுறை.....
எட்டாம் திருமுறை
2. திருமாலை என்னும் பிரபந்தம் பாடியவர்.......
தொண்டரடிப்பொடியாழ்வார்
3. நம்மாழ்வாரின் பெற்றோர்.......
காரியார், உடைய நங்கை
4. ராமானுஜ நூற்றந்தாதி பாடியவர்......
திருவரங்கத்து அமுதனார்
5. முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர்.......
பாம்பன் சுவாமிகள்
6. சங்கரரின் சீடரான பத்மபாதரின் இயற்பெயர்.......
சனந்தனர்
7. தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கோயில்......
குறுக்குத்துறை முருகன் கோயில்
8. சிவன் காளியோடு நடனம் ஆடிய தலம்.......
திருவாலங்காடு
9. சம்பந்தரின் பாட்டால் உயிர் பெற்ற பெண்..........
பூம்பாவை
10. கம்பன் கவிநயம் நூலின் ஆசிரியர்......
கிருபானந்த வாரியார்