
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெந்த நீறணி மார்பில் தோல் புனை
அந்தமில்லவன் ஆடானை
கந்த மாமலர் தூவிக் கை தொழும்
வலங் கொள்ளார் வினை மாயுமே.
பொருள்: சாம்பலான திருநீற்றினை அணிந்தவனே! மார்பில் தோலாடையை உடுத்தியவனே! ஆதியந்தம் இல்லாதவனே! மணம் மிக்க மலர்களை கைகளால் தூவியும், வலம் வந்தும் வழிபடுவோரின் தீவினைகளைப் போக்கும் சிவனே! திருவாடானை என்னும் திருத்தலத்தில் வாழ்பவனே! உன்னை வணங்குகிறேன்.