
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்யாண தாத்ரி கமனீய பதாப்ஜயுக்மே
தாரித்ரயதுக பயஹாரிணி பக்தனம்ரே!
வைகான ஸராய மஹிதே மதுபேதி பார்யே
ஸெளந்தர்ய வல்லி சரணௌ சரணம் ப்ரபத்யே!!
பொருள்: கல்யாண வரம் தருபவளே! அழகு மிகுந்த திருப்பாதம் கொண்டவளே! ஏழ்மை, கவலை, பயத்தைப் போக்குபவளே! பக்தர்களால் வணங்கப்படுபவளே! வைகானச மார்க்கத்தினரால் பூஜிக்கப் படுபவளே! மது என்னும் அரக்கனை வதம் செய்த விஷ்ணுவின் பத்னியே! சவுந்தர்யவல்லித் தாயே! உன்னை சரணாகதி அடைகிறேன்.