தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : மே 11, 2016 02:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2016 02:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர்தொழ

வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்

ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது

தருமகளே தமியேன் தலைமீது நின்தாள் வையே.

பொருள்: செல்வத்திருமகளே! தேவர்கள் வணங்க பாற்கடலில் இருந்த அமுத கலசத்துடன் வந்தவளே! உலகத்தை செல்வச் செழிப்பால் வாழ வைப்பவளே! திருமாலின் மார்பில் தங்கியிருப்பவளே! வெற்றியை அருள்பவளே! எளியவனான என் மீது உனது திருவடியை வைத்து அருள்புரிய வேண்டும்.

குறிப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடிய திருமகள் அந்தாதி பாடல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us