ADDED : மே 11, 2016 02:09 PM

அ நிறம் | அளவு
1. பாற்கடலில் அவதரித்த திருமகளின் பெயர்.......
ஆதிலட்சுமி
2. லட்சுமி வாசம்(தங்குதல்) என்று பெயர் பெறும் மரம்.......
வில்வம்
3. மகாலட்சுமியைப் போற்றும் வேத மந்திரம்.....
ஸ்ரீசூக்தம்
4. குபேரனின் கிரீடத்தில் குடியிருப்பவள்.......
மகுட லட்சுமி
5. நிகமாந்த தேசிகர் லட்சுமி மீது பாடிய ஸ்தோத்திரம்......
ஸ்ரீ ஸ்துதி
6. குபேரனின் அருகில் வீற்றிருக்கும் இருவர் ........
சங்கநிதி, பதுமநிதி
7. பார்கவ முனிவரின் மகளாகப் பிறந்த லட்சுமி......
பார்கவி
8. மகாராஷ்டிராவில் புகழ் மிக்க லட்சுமிதலம்......
கோலாப்பூர்
9. கோவில்களில் நடனமிடும் லட்சுமி சிற்பம் அமைத்த மன்னர்கள்........
ஹோய்சாளர்கள்
10. திருப்பதிக்கு செல்லும் முன் தரிசிக்க வேண்டிய கோவில்.....
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்
