ADDED : ஜூன் 26, 2016 12:12 PM
அ நிறம் | அளவு
தந்தையாய் உலகுக்கோர் தத்துவன் மெய்த்தவத்தோர்க்குப்
பந்தமாயின பெருமான் பரிசுடை அவர் திருவடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே.
பொருள்: உலகின் தந்தையாக திகழ்பவனே! ஒப்பற்ற தத்துவமானவனே! உண்மை தவநெறியில் வாழ்வோருக்கு உறவாகவும், பரிசாகவும் இருப்பவனே! அழகும், குளர்ச்சியும் நிறைந்த நீர்வளம் மிக்க திருவானைக்காவல் என்னும் ஊரில் வசிப்பவனே! என்னுடைய தந்தையே! உனது திருவடியைச் சரணடைவோரை ஏற்று ஆட்கொள்பவனே! என்னையும் ஏற்று ஆட்கொள்ள வேண்டும்.
குறிப்பு: சுந்தரர் பாடல்
