ADDED : ஜூலை 08, 2016 10:53 AM
அ நிறம் | அளவு
ஊனில் மேய ஆவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ
வானினோடு மண்ணும் நீ வளங்கடல் பயனும் நீ
யானும் நீ அதன்றி எம்பிரானும் நீ இராமனே!
பொருள்: என் உயிரானவனே! நீயே உறக்கமாகவும், உணர்ச்சியாகவும் இருக்கிறாய். பசுவிடம் கிடைக்கும் பால், தயிர், நெய், சாணம், கோமியம் என்னும் பஞ்சகவ்யப் பொருளாகவும், அதன் புனிதத்தன்மையாகவும் இருப்பவன் நீயே. வானம், பூமி, கடல் என இயற்கையாக திகழ்பவனே! என் தலைவனாகிய
ராமபிரானே! உன்னை வணங்குகிறேன்.
குறிப்பு: திருமழிசை ஆழ்வார் பாடல்
