ADDED : செப் 16, 2016 09:27 AM
அ நிறம் | அளவு
சென்றது இலங்கை மேல் செவ்வேதன் சீற்றத்தால்
கொன்றது இராவணனைக் கூறுங்கால் நின்றதுவும்
வேயோங்கு தண்சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து.
பொருள்: திருமால் ராமனாக அவதரித்து, ஆவேசமாகப் போரிட்டு ராவணனைக் கொன்றார். அப்பெருமான் அருளும் தலம் திருப்பதி. மூங்கில்கள் நிறைந்ததும், குளிர்ச்சி மிக்கதுமான இந்த தலத்தில் பெருமானைத் தரிசிக்க வரும் தேவர்கள், அவரை வாயார புகழ்கின்றனர்.
குறிப்பு: பூதத்தாழ்வார் பாடல்
