ADDED : செப் 30, 2016 11:57 AM

அ நிறம் | அளவு
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
பொருள்: மனிதர்களும், தேவர்களும், மாயையில் இருந்து விடுபட்ட முனிவர்களும் வந்து தலைதாழ்த்தி வணங்கும் சிவந்த திருவடிகளைக் கொண்ட கோமளவல்லியே! அபிராமியே! கொன்றை மலர்களையும், குளிர்ந்த நிலவினையும், பாம்பினையும், புனித கங்கை நீரையும் தலைமேல் சூடிய ஈசனும், நீயும் என் சிந்தையில் எந்தநாளும் நிறைந்திருப்பீர்களாக.
குறிப்பு : அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதி பாடல்
