ADDED : அக் 14, 2016 04:13 PM

அ நிறம் | அளவு
பொன்னியல் கொன்றை பொறிகிளர் நாகம் புரிசடைத்
துன்னிய சோதி யாகிய ஈசன் தொன்மறை
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறுநோயே.
பொருள்: பொன்னிறமான கொன்றைமலர் சூடியவரே! ஊர்கின்ற பாம்பினை ஜடாமுடியில் சூடியவரே! ஜோதி வடிவான தலைவரே! பழமை மிக்க
வேதங்களால் போற்றப்படுபவரே! ஆடலில் சிறந்தவரே! திருப்பரங்குன்றத்தில் வீற்றிருப்பவரே! உம்மைச் சிந்தித்த அடியார்களைப் பிறவிநோய் தீண்டுவதில்லை.
குறிப்பு: சம்பந்தர் தேவாரப்பாடல்
