ADDED : நவ 04, 2016 11:56 AM

அ நிறம் | அளவு
விழிக்குத் துணை திருமென் மலர்ப்பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகா என்னும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
பொருள்: முருகப்பெருமானின் மலர் போன்ற பாதங்கள், நமக்கு கண் கண்ட துணையாகும். அவரது பெயரை உச்சரித்தால் உண்மையைத் தவிர வேறு ஏதும் பேச வராது. அவனது பன்னிரண்டு தோள்கள் முற்பிறவியில் செய்த தீவினைகளில் இருந்து நம்மை விடுவிக்கும். ஏதுமறியாமல் தனிமையில் தவிக்கும் போது வடிவேலையும், மயிலையும் நினைத்தால் துணையாக வந்து காத்தருளும்.
குறிப்பு: அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரப் பாடல்.
