
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.
பொருள்: முருகப்பெருமானின் ஆறுமுகங்களும், வலிமைமிக்க பன்னிரு தோள்களும் வாழ்வாங்கு வாழட்டும். மலையை இருகூறாக்கும் சிறந்த வேலாயுதம் நிலைக்கட்டும்.
சேவல்கொடியும், பவனிவரும் மயிலும் நிலைத்து விளங்கட்டும். தெய்வானையும், மாறுபாடு இல்லாத வள்ளியும் நீடூழி வாழட்டும். பெருமைமிக்க அடியார்கள் என்றும் நிலை பெற்று வாழ்வார்களாக.

