தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : பிப் 15, 2019 11:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2019 11:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடிவுடை வாள் தடங்கண் உமை அஞ்சவோர் வாரணத்தைப்

பொடியணி மேனி மூடவுரி கொண்டவன் புன்சடையான்

கொடிநெடு மாடம் ஓங்கும் குழகன் குடமூக்கிடமா

இடிபடு வானம் ஏத்த இருந்தானவன் எம்மிறையே.

(ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்)

பொருள்: வாள் போல கூரிய விழிகளைக் கொண்டவள் பார்வதி. அவளே பயப்படும் விதத்தில், யானை வடிவ அசுரனைக் கொன்று தன் மேனியில் போர்த்திக் கொண்டவர் சிவன். உடம்பெங்கும் திருநீறு அணிந்தும், ஜடாமுடி தரித்தும் இருக்கும் அப்பெருமான் உயர்ந்த மாடங்கள் சூழ்ந்த கும்பகோணத்தில் கோயில் கொண்டிருக்கிறார். மழை வளம் மிக்க அந்த தலத்தில் தேவர்களும் வழிபட்டு பலன் அடைகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us