நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனைவி தாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றம் என்னும்
வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடமாகாதே
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகாரோணத்தானை
நினையுமா வல்லீராகில் உய்யலாம் நெஞ்சினீரே.
(திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்)
பொருள்: நல்ல மனம் படைத்தவர்களே! ஆரவாரம் செய்யும் கடல் சூழ்ந்த நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரரை சிந்தித்தால் மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் பற்றுகளில் சிக்கி வேதனைக்கு ஆளாக மாட்டீர்கள். பிறப்பற்ற நிலையை அடைவீர்கள்.

