
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும்
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்கு!
போதலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன்
ஓதமும் நானும் உறங்கா திருந்தேனே!
(திருமங்கையாழ்வார் பாடிய பாடல்)
பொருள்: வேதம், யாகம், வானம், சூரியன், சந்திரன் ஆகிய அனைத்திற்கும் ஆதியாகத் திகழ்பவன் திருமால். மலர்கள் நிறைந்த புன்னை மரங்களால் சூழப்பட்ட திருப்புல்லாணியில் அருளும் பெருமானை கை குவித்து வணங்கினேன். இருந்தாலும் என்னையும், இந்த பரந்த கடலையும் கண்ணுறங்காமல் செய்து விட்டானே. இவன் அருள் செய்த தன்மையை என்னவென்று சொல்வது?