
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த்தரணிமயீம் தரணிமயீம் பவனமயீம்
ககனதஹன ஹோத்ருமயீம்!
அம்புமயீ மிந்துமயிமம்பா மனு
கம்பமாதி மாமீக்ஷே!!
(மூகபஞ்ச சதி ஸ்தோத்திர ஸ்லோகம்)
பொருள்: பூமியின் வடிவமாகத் திகழ்பவளே! சூரியன், வாயு, வானம், நெருப்பு இவற்றின் உருவமானவளே! யாகம் செய்பவர்களின் அம்சமாக இருப்பவளே! நீர், சந்திரனின் வடிவானவளே! கம்பா நதிக்கரையில் வாசம் செய்பவளே! உலகத்தின் தாயான காமாட்சியே உன்னை வணங்குகிறேன்.