
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்
பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை
தீர்த்தருளும் வேலப்பா செந்தில் வாழ்வே!
பொருள்: உன்னைத் தவிர வேறு ஒருவரை நான் நம்பவில்லை. இனிமேல் யார் ஒருவரையும் பின்தொடர்ந்து வழிபட மாட்டேன். பன்னிரு கைகளைக் கொண்ட முருகனே! தண்டாயுதத்தை தாங்கியவனே! கொடிய வினைகளைப் போக்கும் வேலாயுதப்பெருமானே! திருச்செந்துாரில் குடிகொண்டிருப்பவனே! உன்னை வணங்குகிறேன்.