ADDED : மே 29, 2020 09:29 PM

* செல்வ வளத்தின் அடையாளம் தண்ணீர்.தொழில்புரிவோர் தங்களின் அறைகளில் தண்ணீர் வழிந்தோடுவது, அருவி கொட்டுவது போன்ற ஓவியங்களை வைத்தால் லாபம் பெருகும்.
* சந்திராஷ்டம நாளில் செம்பருத்தி, அருகம்புல், மல்லிகைப்பூவை விநாயகருக்கு அணிவித்து வழிபட தடைபட்ட செயல் இனிதே நிறைவேறும்.
* தேய்பிறை அஷ்டமி, சதுர்த்தசி நாளில் விரதமிருந்து சிவனை வழிபட்டால் நோய் தீரும். உடல், மனபலம் அதிகரிக்கும்.
* மரங்கள் புனிதத்தன்மை கொண்டவை. திருமண நிகழ்ச்சிகளில் மரத்தால் மணமேடை அமைப்பது சிறப்பு.
* அக்னிபகவான் அருளால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பதால் மணமக்கள் திருமணத்தின் போது யாகத்தீயை மூன்று முறை வலம் வருவர்.
* பழைய உணவு, அரைவேக்காடு அல்லது தீய்ந்த உணவுகளை கர்ப்பிணிகள் உண்பது நல்லதல்ல.
* சுவாமிக்கு உடைத்த தேங்காயில் பூ இருந்தால் வாழ்வில் சுகம், மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
* உலர்ந்த, வாடிப்போன பூக்களால் பூஜை செய்வது நல்லதல்ல.
* நரசிம்மருக்கு மகிழம்பூ மாலை சாற்றி வழிபட பில்லி, சூனியம், திருஷ்டி, ஏவல் பிரச்னைகள் தீரும்.