
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எட்டு வகை லட்சுமியால் ஏராளமான செல்வம்
கொட்டுவகை நானறிந்தேன் கோலமயில் ஆனவளே
வெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதிலட்சுமி
வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்
(அஷ்ட லட்சுமி வருகை பதிகப் பாடல்)
பொருள்: அழகிய மயில் போன்றவளே! ஆதிலட்சுமி தாயே! தாமரை மலர் மீதிருப்பவளே! அஷ்டலட்சுமியே! உன் அருளால் அளவில்லாத செல்வம் பெறவும், என் வாழ்வில் வெற்றி பெறவும் இது நல்ல நேரம். அதற்காக இப்போதே அருள வருவாயாக.