ADDED : ஏப் 17, 2012 01:35 PM

அ நிறம் | அளவு
பூத்தவளே! புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே! பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே! உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.
பொருள்: பதினான்கு உலகங்களை தோற்றுவித்துக் காப்பவளே! அவற்றை தனக்குள் அடக்கி வைத்திருப்பவளே! நஞ்சினை உண்ட நீலகண்டனுக்கும் மேலானவளே! என்றும் இளையவரான திருமாலுக்கு தங்கையே! தவத்தில் சிறந்த தவமானவளே! உன்னை அன்றி வணங்குவதற்குரிய வேறு தெய்வம் இங்கு இல்லை.
