
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
பொருள்: அன்பும் சிவமும் வெவ்வேறானவை என்று அறிவில்லாதவர்களே சொல்வர். அன்பே சிவம் என்பதை யாரும் அறியாமல் உள்ளனர். அன்பும் சிவமும் ஒன்று என்பதை உணர்ந்த ஞானிகள், அன்பு வடிவமாகி சிவகதியில் மூழ்கியிருப்பர்.