ADDED : நவ 26, 2013 04:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. சேக்கிழாரின் இயற்பெயர்...
அருண்மொழித்தேவர்
2. சிவனின் நடனத்தை தரிசிக்க தவமிருந்த இருவர்.....
வியாக்ரபாதர், பதஞ்சலி
3. உபன்மன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்....
சிவன்
4. நடராஜரின் தூக்கிய பாதத்தை.... என்பர்
குஞ்சிதபாதம்
5. உமாபதி சிவாச்சாரியார் எழுதிய நூல்கள்...
சித்தாந்த அட்டகம்(8 நூல்கள்)
6. கருவறையில் அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்...
கோமுகி
7. முக்திவாசல் எனப் போற்றப்படும் தலம்....
திருவெண்காடு (நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புதன் ஸ்தலம்)
8. சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்....
கோச்செங்கட்சோழன்
9. காலனை உதைத்த சிவன் அருளும் தலம்....
திருக்கடையூர் (காலசம்ஹார மூர்த்தி)
10. சிவசின்னங்கள் எனப்படுபவை....
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்