
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடினான் உமையாள் ஒரு பாகமாய்
வேடனாய் விசயற்கு அருள்செய்தவன்
சேடனார் சிவனார் சிந்தை மேய வெண்
காடனார் அடியே அடை நெஞ்சமே.
பொருள்: மனமே! சிவபெருமான் உமையவளை இடப்பாகத்தில் ஏற்றிருக்கிறார். அர்ஜூனனுக்கு அருள்புரிய வேடனாக வந்தார். நாகத்தை அணிகலனாக அணிந்துள்ளார். திருவெண்காட்டில் வீற்றிருக்கும் அப்பெருமானின் திருவடிகளைச் சரணடைவாயாக.