ADDED : டிச 11, 2013 02:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. முருகனை வணங்க நாலாயிரம் கண்வேண்டும் என பாடியவர்.......
அருணகிரிநாதர்
2. பூலோக திருப்பதிகள் எத்தனை உள்ளன?
106
3. சிவனுக்குரிய சாத்திர நூல்களைப் பாடியவர்கள்........
சந்தானக் குரவர்கள்
4. கமலாலயம் என்னும் தெப்பக்குளம் உள்ள தலம்......
திருவாரூர்
5. வால்மீகிக்கு ராமனின் வரலாற்றைக் கூறியவர்......
நாரதர்
6. மாய மானாக வந்த மாரீசனின் தாய்.....
தாடகை
7. கும்பகோணத்தை தமிழில் எப்படி குறிப்பிடுவர்?
குடந்தை, குடமூக்கு
8. ஆடும், யானையும் சிவனை வழிபட்ட தலம்.....
திருவாடானை
9. விஷ்ணுவுக்குரிய துவாதச(12 எழுத்து) மந்திரம்....
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
10. குமாரசம்பவம் என்னும் காவியத்தை எழுதியவர்.....
காளிதாசர்