நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் காட்டி
வடதிசை பின்பு காட்டி தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகு மாலோ என் செய்கேன் உலகத்தீரே
பொருள்: மேற்கு நோக்கி தலை வைத்து, கிழக்கில் திருப்பாதம் நீட்டியவரே! வடதிசையில் முதுகையும், தெற்கிலுள்ள இலங்கை நோக்கி முகத்தையும் காட்டுபவரே! கடல் நிறம் கொண்ட கண்ணனே! என் தந்தையே! பாம்பணையில் பள்ளி கொண்டவரே! உம்மைக் கண்டு உள்ளமும், உடலும் உருகுகின்றதே. நான் என்ன செய்வேன்?