
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸப்த ப்ராகார மத்யே ஸரஸிஜமு குளோத் பாஸமானே விமானே
காவேரீ மத்யதேஸே ம்ருதுதரபணிராட் போக பர்யங்க பாகே!
நித்ரா முத்ராபிராமம் கடிநிகட ஸிர: பார்ஸ வவின்யஸ்த ஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம்!!
பொருள்: காவிரியாற்றின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்டு இருப்பவரே! தாமரை மலர் போன்ற விமானம் பெற்றவரே! ஆதிசேஷன் மீது யோகநித்திரை கொண்டவரே! இடது கையை இடுப்பில் வைத்தவரே! ஸ்ரீதேவி, பூதேவி இருவராலும் பிடிக்கப்பட்ட பாதம் உடையவரே! ரங்கராஜரே! உம்மைப் போற்றுகிறேன்.