
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்ற சடையிற் பொலி வித்த புராணனார்
தென்ன வென்று வரி வண்டிசை செய் திருவாஞ்சியம்
என்னை யாளுடை யானிட மாக உகந்ததே.
பொருள்: வன்னி, கொன்றை, ஊமத்தம், எருக்கு, கூவிள மலர்களைச் சடையில் சூடிக் கொண்டவன் சிவன். என்னை ஆளுகின்ற அப்பெருமான் மிகப் பழமையானவன். அவன் வண்டுகள் ரீங்காரமிடும், ஸ்ரீவாஞ்சியம் என்னும் தலத்தில் விருப்பத்தோடு கோயில் கொண்டுள்ளான்.