
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்புறு சிந்தை யராகி அடியவர்
நன்புறு நல்லார்ப் பெருமண மேவிநின்
இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டு செய்வாரே.
பொருள்: மனதில் அன்புணர்வு கொண்டவர்களே சிறந்த பக்தர்கள் ஆவர். அவர்கள் நன்மை பயக்கும் நல்லூர்ப்பெருமணம் கோயிலில் இன்பமாக வீற்றிருக்கும், என் தந்தையான சிவனின் திருவடிகளைப் போற்றி வணங்கியபடியே இருப்பார்கள். வாழ்வில் துன்பம் என்பதே அறியாமல், எப்போதும் சிவத்தொண்டு செய்து மகிழ்வார்கள்.
குறிப்பு: நல்லூர் பெருமணம் கும்பகோணம் அருகில் உள்ளது.