நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நானே உன்னடியை நினைந்தேன் நினைதலுமே
ஊனே இவ்வுடலம் புகுந்தாய் என் ஒண்சுடரே
தேனே இன்னமுதே திருமேற் றளியுறையும்
கோனே உன்னையல்லால் குளிர்ந்தேத்த மாட்டேனே.
பொருள்: சிவபெருமானே! ஒளி மிக்கவனே! உன் திருவடியைச் சிந்தித்ததன் பயனாக, சதையாலான, என் உடம்பையே இடமாக ஏற்றுக் கொண்டாய். தேன்போல இனியவனே! அமுதம் போன்றவனே! கச்சிமேற்றளி என்னும் காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் தலைவனே! உன்னையல்லாமல் வேறு யாரையும் நான் வணங்க மாட்டேன்.