
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத் துக்கும் வித்தாகும்- கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதுவும் வம்பு.
பொருள்: கோதையாகிய ஆண்டாள் எழுதிய திருப்பாவை முப்பது பாசுரங்களைப் படித்தால் தீமை அனைத்தும் நீங்கும். பரம்பொருளான திருமாலின் திருவடியில் சேர்க்கும். வேதத்திற்கு வித்தாக விளங்கும் அப்பாடல்களை அறியாத மனிதர்களை இந்த உலகம் சுமந்திருப்பது கூட வம்பாகும்.