
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாவினிற் பரவிப் பல்கா னனை கமழ் நறுந்தண் போது
தூவி வீழ்ந்திறைஞ்சு நாகச் சூட்டொளிர் மணியின் சோதி
மேவலாற் பஞ்சியூட்டி விளங்கிய வண்ணங் காட்டும்
ஆவுடை மாது செம்பொன் அடி துணை சென்னி வைப்பாம்.
பொருள்: பக்தனே! சங்கரன்கோவிலில் குடிகொண்ட ஆவுடையம்மனை (கோமதி) நாவினால் புகழ்ந்து பாடு. அவளுக்கு நறுமணம் மிக்க அரும்பு மலர்களைத் தூவு. உச்சியில் நாகமும், பிரகாசிக்கின்ற ரத்தினக்கற்களின் ஒளியும் உடைய அவளது திருவடியில் உனது சிரசை வைத்து வணங்கு.