
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிருண்டான்
சீர்மல்கு சோலை தென் காட்கரை யென்னப்பன்
கார்முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேனே.
பொருள்: வளம் மிக்க திருகாக்கரையில் எழுந்தருளி இருக்கும் வாமனனே! குணத்தில் சிறந்தவனே! என் உள்ளத்தில் புகுந்து உயிரையே எடுத்துக் கொண்டவனே! கார்மேகம் போல கரிய நிறம் கொண்டவனே! உன் மாயத்தின் தன்மையை (குறுகிய வடிவில் வந்து உலகளந்த வித்தை) என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.