நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூத்தவளே! புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே! பின் கரந்தவளே! கறை கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே! உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.
பொருள்: பதினான்கு உலகங்களையும் படைத்தவளே! நல்வழியில் காப்பவளே! அவற்றை அழிக்கும் சக்தியும் பெற்றவளே! நீலகண்டராகிய சிவனுக்கும் மூத்தவளே! என்றும் இளமை மிக்க திருமாலின் தங்கையே! அரிய பெரிய தவம் செய்தவளே! உன்னை அல்லாமல் மற்றொரு தெய்வத்தை வணங்க மாட்டேன்.