ADDED : செப் 26, 2014 02:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. பாற்கடலில் அவதரித்ததால் திருமகளை...... என்பர்
அலைமகள்
2. சரஸ்வதி .......ல் வீற்றிருப்பதாகச் சொல்வர்.
நாக்கு (அதனால் நாமகள் என்றும் பெயருண்டு)
3. இமவான் என்பவர் யார்?
பார்வதியின் தந்தை
4. யோகநிலையில் காட்சி தரும் அம்பிகை......
திருவாரூர் கமலாம்பிகை
5. அம்பிகை குயிலாக விளங்கும் தலம்........
மதுரை(கடம்பவனக்குயில்)
6. 32 அறங்களைச் செய்த அம்பிகை.........
காஞ்சி காமாட்சி
7. முதுமை, இளமைக் கோல அம்பிகையரை எங்கு தரிசிக்கலாம்?
விருத்தாச்சலம்(விருத்தாம்பாள், பாலாம்பாள்)
8. சிவனோடு போட்டி நடனம் ஆடியவள்........
தில்லை காளி
9. உலக நன்மைக்காக பட்டினி விரதம் இருக்கும் அம்பிகை.......
சமயபுரம் மாரியம்மன்
10. சரஸ்வதி, லட்சுமி, காளி மூவரும் அருளும் தலம்.......
மும்பை மகாலட்சுமி கோயில்