
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமகளே! திருப்பாற்கடல் ஊடன்று தேவர்தொழ
வருமகளே! உலகு எல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே! நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது
தருமகளே! தமியேன் தலை மீது நின் தாளை வையே.
பொருள்: செல்வத் திருமகளே! பாற்கடலில் அவதரித்தவளே! தேவர்களால் வணங்கப்படுபவளே! உலக உயிர்களை எல்லாம் என்றென்றும் வாழ வைக்கும் தேவியே! திருமாலின் நெஞ்சில் இருந்து கொண்டு ஆற்றல் அனைத்தும் அருள்பவளே! எளியவனாகிய என் தலையின் மீது உன் திருப்பாதங்களை வைப்பாயாக.