நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரிஹர புத்ரனை ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை
சபரி கிரீசனை சாந்த ஸ்வரூபனை
தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோமே.
பொருள்: சிவனுக்கும், திருமாலுக்கும் (மோகினி) பிள்ளையாக வந்தவனே! ஆனந்த வடிவானவனே! இருமூர்த்தி மைந்தனே! முருகப்பெருமானின் தம்பியே! சபரிமலையில் வாழ்பவனே! சாந்த வடிவானவனே! தினமும் உன் திருவடியைப் போற்றிப் பணிகிறோம்.