நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி
நன்றாக வானவர் மாமுனிவர் நாடோறும்
நின்றார வேத்து நிறைகழலோன் புனைகொன்றைப்
பொன்றாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ.
பொருள்: ''ஆலமரத்தின் அடியில் எழுந்தருளியவரே! அரிய மறைகளை வானவர்களுக்கும், முனிவர் நால்வருக்கும் உபதேசித்தவரே! கழல் அணிந்த பாதமும், கொன்றை மலர் மாலையும் கொண்டவரே!'' என்று தட்சிணாமூர்த்தியின் புகழைப் பாடியபடியே பூஜைக்குரிய பூக்களைப் பறிப்போம்.
குறிப்பு: மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகப்பாடல்