ADDED : ஆக 18, 2015 02:20 PM

அ நிறம் | அளவு
வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக்கட் செல்லார்- நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம்பேர்ச் செங்கட்
கரியானைக் கைதொழுதக் கால்.
பொருள்: மனதால் நினைப்பதற்கு அரியவர் திருமால். பரமபதத்தில் வீற்றிருப்பவர். ஆயிரம் திருநாமம் கொண்டவர். இந்தப் பெருமானைச் சரணடைந்தால் தீவினைகள் நீங்கும். கொடிய நரகத்தில் வாழும் நிலை உண்டாகாது. தீயவழியில் செல்லும் கொடிய நிலை ஏற்படாது.
குறிப்பு: பொய்கையாழ்வார் பாடல்
