ADDED : செப் 08, 2015 10:58 AM

அ நிறம் | அளவு
பயிரவி பஞ்சமி பாசாங் குசைபஞ்ச பாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலிவராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.
பொருள்: பைரவியே! ஆணவம் உள்ளிட்ட ஐந்து விரும்பதகாத குணங்களைப் போக்கும் பஞ்சமியே! பாசமும், அங்குசமும் தாங்கியவளே! மலர் அம்பு ஏந்தியவளே! வஞ்சகரை அழிப்பவளே! சண்டி என்ற பெயர் கொண்ட துர்க்கையே! கரிய நிறம் படைத்தவளே! ஒளிரும்
கலை ஞானம் படைத்த வயிரவியே! பூமண்டலத்தைக் காப்பவளே! மாலினியே! திரிசூலம் கொண்டவளே! சப்த மாதர்களில் வராகி என அழைக்கப்படுபவளே! பாவங்களை நீக்குபவளே! நான்கு வேதங்களில் பல திருநாமங்களால் போற்றப்படுபவளே! உன்னை வணங்குகிறேன்.
குறிப்பு: அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி பாடல்
