ADDED : செப் 16, 2015 12:25 PM

அ நிறம் | அளவு
பந்தம் அகற்றும் அனந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து சுரக்குமோ
சந்த மறை ஆகமம் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.
பொருள்: உயிர்களைப் பற்றியுள்ள பாசம் என்ற மாயையை போக்கும் குணக்கடலே! எல்லா உலகங்களையும் தோற்றுவித்தவரே! வேதத்தையும், ஆகமங்களையும் உலகிற்கு அளித்தவரே! முதல் கடவுளாகிய கணபதியே! உமது திருவடியை அன்புடன் வணங்குகிறோம்.
குறிப்பு: கபிலரின் காரிய சித்தி மாலை பாடல்.
